இங்கெல்லாம் அதிக பணப்புழக்கம் இருக்கு : அதிர்ச்சி தகவல் வெளியிட்ட தேர்தல் ஆனையம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடங்கியுள்ளது, இதனால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதோடு வக்களார்களை கவர பணப்பட்டுவாட நடப்பதும் தொடங்கிவிட்டது. அரசியல் சட்டபடி பணப்பட்டுவாடா செய்வது சட்டப்படி குற்றமாகும். வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் அதிக பணப்பட்டுவாடாவுக்கு வாய்ப்புள்ள 118 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தொகுதிகளை கண்காணிக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதே போல், புதுச்சேரியில் 30 தொகுதிகளும், மேற்கு வங்கத்தில் 47 தொகுதிகளும் அசாமில் 52 தொகுதிகளும் கேரளாவில் 25 தொகுதிகளும் அதிக பணபட்டுவாடா நடக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட பகுதிகளில் தமிழகத்தில்தான் அதிக பணம் வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.