தேர்தல் அறிவித்த நாள் முதல் எவ்வளவு ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது தெரியுமா?
தமிழக தேர்தல் அறிவிப்புக்கு பின் பல நூறு கோடி ரூபாய் ரொக்கம் மட்டும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என பிப்ரவரி 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் தேர்தல் தினம் அறிவித்த பின்னர் அரசியல் காட்சிகள் மக்களுக்கு ரொக்கமாகவோ அல்லது பரிசு பொருட்களை வழங்கியோ தங்களது கட்சிக்கு வாகு சேகரிப்பர். அவற்றை தடுக்கும் பொருட்டு தேர்தல் ஆணையம் பறக்கும் படை அமைத்து தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சோதனையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதியில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற பணம் மற்றும் பரிசு பொருட்கள் என மொத்தம் 428 கோடியே 46 லட்சம் கைப்பற்றியுள்ளனர். இதில் ரொக்கமாக மட்டும் 225.52 கோடியும், 4 கோடியே 61 லட்சம் மதிப்புள்ள 2,75,293 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2.21 கோடி மதிப்புள்ள கஞ்சா, 173.08 கோடி மதிப்புள்ள 522 கிலோ தங்கம், 2 கோடியே 93 லட்சம் மதிப்புள்ள 662 கிலோ வெள்ளி. 7 லட்சம் மதிப்பிலான 860 கிலோ இதர உலோக பொருட்கள். 20.01 கோடி மதிப்புள்ள சுவர் கடிகாரம், சேலை, வேட்டி உள்ளிட்ட பரிசு பொருட்கள் என 428.46 கோடி மதிப்புள்ள பணம் என தற்போது வரையில் தேர்தல் பறக்கும் படையினர் பரிமுத்தா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.