மீனவர் மீது துப்பாக்கிச் சூடு - இந்திய கடற்படை வீரர்கள் மீது வழக்குப்பதிவு
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்ட நிலையில் வேதாரண்யம் மெரைன் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வீரர்கள் மீது வழக்குப்பதிவு
நேற்று அதிகாலை மீன் பிடித்துவிட்டு கரை திரும்பி நாகை மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவருக்கு குண்டு அடி பட்டு அவர் தற்போது மதுரையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் அவருடன் மீன் பிடித்த எஞ்சிய 9 மீனவர்கள் நேற்று இரவு நாகை கடற்கரை பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வேதாரண்யம் மரைன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அந்த வழக்குப்பதிவில், நடுக்கடலில் துப்பாக்கிச் சூடு நடத்திய பி65 என்ற இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் இருந்து கடற்படை வீரர்கள் மீது கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியது, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கடற்படை வீரர்களிடம் மரைன் போலீசார் இன்று விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.