தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் - இலங்கை கடற்படை மீது வழக்குப்பதிவு
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், அங்கிருந்த தமிழக மீனவர்கள் 6 பேர் மீதும் திடீரென இரும்பு கம்பிகளை கொண்டு தாக்குதல் நடத்தினர். மீனவர்களிடம் இருந்த வலை போன்ற பொருட்களையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படை மீது வழக்குப்பதிவு
இலங்கை கடற்படை மீது வழக்குப்பதிவு, இந்த நிலையில், தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுக்கொள்ளை, கொலைமுயற்சி, அத்துமீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.