பள்ளி சிறுமியை கொடூரமாக தாக்கிய பசு மாடு - மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு..!
சென்னை அரும்பாக்கத்தில் பள்ளி சிறுமியை பசு மாடு கொம்பால் முட்டித்துாக்கி கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் மாட்டின் உரிமையாளர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமியை கொடூரமாக தாக்கிய பசு மாடு
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலணியில் பள்ளி முடிந்து தாயுடன் சிறுமி வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
வீதியில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த பசு மாடு திடீரென அந்த பள்ளி சிறுமியை கொம்பால் முட்டித்துாக்கி வீசியது.
பின்னர் அந்த சிறுமியை கீழே வீசி தனது கொம்பால் விடாமல் தாக்கியது. தாய் கற்களை வீசி விரட்ட முயன்றார். மேலும் பள்ளி சிறுமி மற்றும் தாய் கதறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அந்த பகுதி மக்கள் மாட்டை விரட்ட முயன்றனர்.
அப்போது மாடு அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கடுமையாக சிறுமியை தாக்குவதை நிறுத்தவில்லை. பின்னர் பொதுமக்கள் கடும் போராட்டாத்திற்கு பின் பள்ளி சிறுமியை மீட்டனர்.
2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
மாடு தாக்கியதில் காயமடைந்த பள்ளி சிறுமி சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி சிறுமியின் தந்தை இது போன்று எந்த குழந்தைக்கும் நடக்க கூடாது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மாட்டின் உரிமையாளர் மீது
உயிருக்கு ஆபத்து விளைவிப்பது, கவனக்குறைவாக இருப்பது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.