கோவை கார் வெடிப்பு சம்பவம்; கிஷோர் கே.சுவாமி மீது வழக்குப்பதிவு
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அமைதியை குலைக்கும் வகையில் கருத்து பதிவிட்ட கிஷோர் கே.சுவாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிஷோர் கே.சுவாமி மீது வழக்குப்பதிவு
கடந்த 23ம் தேதி கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கார் சிலிண்டர் வெடித்து சிதறியது இதில் காரில் பயணித்த ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் பின்னர் இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பாக NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வளைத்தலத்தில் கருத்து பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.