மதுரையில் நாக்கை வெட்டுவோம் என்று பேசிய பாஜக செயலாளர் மீது வழக்குப்பதிவு

Tamil nadu Tamil Nadu Police Madurai
By Thahir Oct 10, 2022 10:17 AM GMT
Report

இந்து சமயம்? கடவுள் மீது சுய லாபத்திற்காக அரசியல் பேசுபவர்களின் நாக்கு வெட்டப்படும் என பேசிய மதுரை மாவட்ட பாஜக செயலாளர் மீது 6 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக நிர்வாகியின் சர்ச்சை பேச்சு 

மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியில் உள்ள கலர்லம்பல் வில்வநாதர் கோவலில் மாவட்ட பாஜக சார்பில் கடந்த 7-ந் தேதி சிறப்பு பூஜை நடந்தது. இதில் மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் மகா.சுநீந்திரன் கூறுகையில், இந்து சமயத்தை கேவலப்படுத்துவதற்காகவே ஒரு கும்பல் திரிந்து வருகிறது. அவர்கள் சுய லாபம், அரசியல் ஆதாயத்திற்காக, இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசி வருகின்றனர். அதனை நாங்கள் இனிமேலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

மதுரையில் நாக்கை வெட்டுவோம் என்று பேசிய பாஜக செயலாளர் மீது வழக்குப்பதிவு | Case Registered Against Bjp Secretary

இந்து மதத்தையும், கடவுள்களையும் அசிங்கமாக பேசுபவர்களின் உடலில் நாக்கு இருக்காது.அதனை துண்டு துண்டாக வெட்டி வீசுவோம் என்றார்.

போலீசார் வழக்குப்பதிவு 

இவரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நாக்கு வெட்டப்படும் என பேசிய விவகாரத்தில் பாஜக செயலாளர் மகா. சுசீந்திரன் மீது சிலைமான் போலீசார், பொது இடத்தில் அவமரியாதையாக பேசியது,

சட்டம் - ஒழுங்கு. அமைதிக்கு குந்தகம் விளைவித்தது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பேசியது, தொண்டர்களை வன்முறைக்கு துாண்டியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்