அனுமதியின்றி 33 இடங்களில் போராட்டம் - அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு
ADMK
AIADMK
Tamil Nadu Police
By Thahir
சென்னையில் அனுமதியின்றி 33 இடங்களில் போராட்டம் நடத்திய அதிமுகவினர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு
சென்னையில் விலைவாசி உயர்வின் காரணமாக திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் காவல் துறையின் அனுமதியின்றி 33 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் ஒவ்வொரு பகுதியிலும் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் காவல் துறையின் தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக அதிமுக நிர்வாகிகள் மீது, அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல், சட்ட விரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.