பெரியார் குறித்து சர்ச்சை..சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற 870 பேர் மீது வழக்கு - அடுத்து என்ன?
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற 870 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
சீமான்
பெரியார் குறித்து சர்ச்சையாகப் பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானை எதிர்த்து நேற்று சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது முற்றுகையிட்டு போராட்டத்தை அறிவித்த நிலையில் சீமானின் சென்னை நீலாங்கரை இல்லத்துக்கு முன்பு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.அங்கு வந்த போராட்டகார்கள் சீமானின் உருவப்படத்தைத் துடைப்பம் , செருப்பு உள்ளிட்டவை கொண்டு அடித்தனர்.
வழக்குப் பதிவு
மேலும் சீமானின் உருவப்படத்திற்குச் செருப்பு மாலை அணிந்தும், ஒப்பாரி வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டகார்களை அப்புறப்படுத்த முயன்ற போது காவல்துறையினருக்கும் , போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து போராட்டகார்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இந்த நிலையில் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற 870 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது.