சேலம் தாக்குதல் சம்பவம் - தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் பாயும் .. முதல்வர் ஸ்டாலின்
சேலம் மாவட்டத்தில் காவலர் தாக்கியதால் உயிரிழந்த நபர் குறித்து பேரவையில் பேசிய முதல்வர் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் முருகேசன் என்னும் நபர் தருமபுரிக்கு மது வாங்கிவிட்டு திரும்பி வந்துள்ளார்.
அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முருகேசனை மடக்கி லத்தியால் அடித்துள்ளனர். இதில் முருகேசனின் தலையின் பின்புறம் பலத்த காயமானதால் மயங்கி விழுந்துள்ளார்.
உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகேசன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முருகேசனை காவலர்கள் தாக்கும் வீடியோ இணையத்தில்வைரலான நிலையில், உயிரிழப்புக்கு காரணமான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டுஅவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது
. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் சேலம் தாக்குதலில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.