அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் : சீமான் மீது திருச்சியில் வழக்குப்பதிவு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி சிறப்பு முகாமில் இருக்கும் 4 பேரை விடுவிக்க கோரி திருச்சியில் அனுமதி இல்லாமல் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சீமான் மீது வழக்கு
அதனை தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதமாக பேசியது உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றுமுன் தினம் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக புகார், ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்களை சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

5 பிரிவுகளில் வழக்கு
ஆர்ப்பாட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் சீமான் மீது வழக்குப்பதிவு, அனுமதி இன்றி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடந்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது