ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரிய வழக்கு இன்று விசாரணை

J Jayalalithaa ADMK
By Irumporai Nov 16, 2022 01:21 AM GMT
Report

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்திய விலை உயர்ந்த பொருட்களை ஏலம் விடக்கோரிய வழக்கின் விசாரணை உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது.

சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, என்பவர் ஜெயலலிதாவின் பொருட்களில் குறிப்பாக 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த சேலைகள், 750 ஜோடி காலணிகள், 250 சால்வைகள் நீண்ட நாட்களாக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளதால் அவை நிறம் மங்கி கிழிந்துவிடும் என்றும், அதனால் அவற்றை மட்டும் ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று உச்ச நீதீமன்றத்திற்கு கடிதம் அனுப்பினார்.

அதில் கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வழங்குமாறு அவர் கோரினார். அவற்றுக்கு மத்திய தகவல் ஆணையம் உரிய பதில் அளிக்கவில்லை என்று அவர் கூறினார்.

இதையடுத்து அவர் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு கடிதம் அனுப்பி, தனக்கு உரிய தகவலை வழங்கும்படி மத்திய தகவல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு கோரினார். இந்த நிலையில் விலை உயர்ந்த பொருட்களை ஏலம் விடக்கோரிய வழக்கின் விசாரணை உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது