தலித் சமூகத்தினர் குறித்து அவதூறு கருத்து....உபேந்திரா மீது வழக்குப்பதிவு
பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் பிரபல கன்னட நடிகர் உபேந்திரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பெங்களூரு தெற்கு டிசிபி பி கிருஷ்ணகாந்த் தெரிவித்தார்.
உபேந்திரா
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் வளம் வருபவர் உபேந்திரா. சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் இவர் உத்தம பிரஜாகிய கட்சி என்ற கட்சியை நிறுவி அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.
அவதூறு கருத்து
தனது கட்சியை துவங்கி 4 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் பக்கத்தில் உபேந்திரா நேரலையில் பேசினார். அப்போது அவர், குறிப்பிட்ட தலித் சமூகத்தை பற்றி அவதூறாகவும், இழிவுப்படுத்தும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உபேந்திரா தனது சமூக ஊடக கணக்குகளில் இருந்த வீடியோவை நீக்கிவிட்டு தற்போது அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
இருப்பினும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அவர் மீது பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், சட்டத்தின்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெங்களூரு தெற்கு டிசிபி பி கிருஷ்ணகாந்த் தெரிவித்தார்.