டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவின் ஆதரவாளர்கள் எங்களை மிரட்டுகிறார்கள் : யூடியூபர்ஸ் பரபரப்பு புகார்
டிக்டாக் ரவுடி பேபி சூர்யா ஆதரவாளர்கள் தங்களை மிரட்டுவதாக பல்வேறு யூடியூபர்ஸ் புகார் அளித்துள்ளனர்.
டிக்டாக் மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா (எ) சுப்புலட்சுமி மற்றும் அவரது நண்பர் சிக்கா ஆகிய இருவரும் ஆபாசமாக வலைதளங்களில் பதிவிடுவதாகவும்,
தங்களையும் மிரட்டுவதாகவும் கோவையை சேர்ந்த தம்பதியினர் புகார் அளித்திருந்தனர்.
இதன் பேரிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து எழப்பட்ட புகார்களின் பேரிலும் சில தினங்களுக்கு முன் சூர்யா மற்றும் சிக்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவர் மீதும் தற்போது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரவுடி பேபி சூர்யாவின் ஆதரவாளர்கள் தங்களை மிரட்டுவதாக கூறி ரவுடி பேபி சூர்யா மீது புகார் அளித்தவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த திலகா தம்பதியினர் முதலில் புகார் அளித்த நிலையில் அவர்களுக்கு ஆதரவாக லாரன்ஸ் சூர்யா- (மாற்று திறனாளி- யூடியூபர்), உட்பட சிலர் ஆதரவு தெரிவித்திருந்துள்ளனர்.
இந்நிலையில் சூர்யாவின் ஆதரவாளர்கள் தங்களை தொலைப்பேசி மூலமாகவும் யூடியூப் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுவதாகவும்
தங்களை பற்றி அவர்களது சேனல்களில் தரக்குறைவாக பதிவிடுவதாகவும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் மலேசியா ஆகிய இடங்களில் இருப்பவர்கள் சிலரும் அவர்களது யூடியூர் சேனல்களில் தங்களை பற்றி இழிவாகவும் தவறுதகாவும் பதிவிடுதாக தெரிவித்தனர்.