ஜெயக்குமாரை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் மீது வழக்கு பதிவு
casefiledonadmkpalaniswamy
admktnpolitics
edappadiplaniswamycasefiled
By Swetha Subash
முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி உட்பட 11பேர் மீது அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு செய்தனர் காவல்துறையினர்.
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று அதிமுக சார்பில் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
சேலம் கோட்டையில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சுமார் 1,500 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில், அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் பழனிசாமி உட்பட 11 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.