நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது வழக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது விதிமுறைகளை மீறியதாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி உரிய அனுமதி பெறாமல் ஆலமரத் தெருவில் பரப்புரை மேற்கொண்டதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது.
ஈரோடு இடைத்தேர்தல்:
ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளது, ஆகவே அணைத்துக்கட்சிகளும் தீவிர பரப்புரைகளை மேற்க்கொண்டு வருகின்றது.
வழக்குபதிவு :
இந்த நிலையில் தேர்தல் விதிகளை மீறி ஆலமரத் தெருவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, உள்பட 30க்கும் மேற்பட்டோர் பரப்புரை மேற்கொண்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஈரோடு தெற்கு காவல் துறையினர் மேனகா மீதும், உடன் பரப்புரையில் ஈடுபட்ட 30 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை இதுவரை எந்த வேட்பாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேர்தல் விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சற்று நேரத்தில் நாம் தமிழர் கட்சி முகவர்கள் மற்றும் தொண்டர்கள் தேர்தல் அலுவலரிடம் முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.