சென்னையில் ஊரடங்கை மீறியதாக 10 நாட்களில் 35,629 வாகனங்கள் பறிமுதல் ...
சென்னையில் கடந்த 10 நாட்களில் முழு ஊரடங்கை மீறியதாக 32,980 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மருத்துவ காரணங்கள், அத்தியாவசிய பணிகள் தவிர்த்து தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றும் பொதுமக்களை காவல்துறையினர் எச்சரிப்பதுடன், வாகனங்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் சம்பவமும் நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை மீறியதாக சென்னை காவல்துறை 32,980 வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், தேவையில்லாமல் வெளியே சுற்றியதாக 35,629 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.