தவெக தலைவர் விஜய் மீது வழக்குபதிவு

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Fathima Mar 31, 2026 04:50 AM GMT
Report

விஜய் வேட்பு மனுத்தாக்கல்

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய் நேற்று மனுத்தாக்கல் செய்தார்.

தொடர்ந்து நேற்று பெரம்பூர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கினார்.தமிழகத்தை காக்க வேண்டும் என வழக்கம் போல் திமுக-வுக்கு எதிராக கொந்தளித்தபடி பேசினார்.

தவெக தலைவர் விஜய் மீது வழக்குபதிவு | Case Filed Against Vijay Tvk

விஜய்யின் பிரசார வாகனம் சென்ற போது கூட்டம் கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, தொடர்ந்து அகரம் பகுதியில் பேசிய விஜய் கொளத்தூர் தொகுதி வேட்பாளரின் பெயரை மாற்றிக்கூறினார்.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் விஜய்யின் பாதுகாப்பை கருதி அடுத்தடுத்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது, இதற்கு காவல்துறை ஒத்துழைப்பு வழங்காததே காரணம் என தவெக சார்பில் குற்றம் சுமத்தப்பட்டது.

தவெக தலைவர் விஜய் மீது வழக்குபதிவு | Case Filed Against Vijay Tvk

விஜய் மீது வழக்கு பதிவு

இந்நிலையில் விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக விஜய் உள்ளிட்ட 500 பேர் மீது பெரவள்ளூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூரில் நேற்றைய பிரச்சாரத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், 5 ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி அளித்த நிலையில் 30 ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி விதிமீறலில் ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் மீது வழக்குபதிவு | Case Filed Against Vijay Tvk

தேர்தல் சிறப்பு கண்காணிப்பு பிரிவில் உள்ள அதிகாரி குமார் என்பவர் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வீடியோ பதிவு ஆதாரங்கள் உடன் அதிகாரி குமார் புகார் அளித்துள்ளார்.