சீமான் மீது வழக்குப்பதிவு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பிரசாந்த் கிஷோர்

Naam tamilar kachchi M K Stalin Seeman Prashant Kishor
By Thahir Mar 14, 2023 10:51 AM GMT
Report

புலம் பெயர் தொழிலாளர்களை மிரட்டும் வகையில் பேசியிருந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ள நிலையில் பிரஷாந்த் கிஷோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

வீடியோவை பகிர்ந்த பிரசாந்த் கிஷோர்

தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவங்கள் உண்மையானவை இவற்றை புறக்கணிக்க கூடாது. போலி வீடியோக்கள் என்று கூறுகிறார்கள் ஆனால் விரைவில் உண்மையான வீடியோவை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார் பிரசாந்த் கிஷோர்.

இதை தொடர்ந்து அவர் சீமான் பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். இந்திக்கார பய எல்லாம் தெறிச்சு ஓட போறான். நான் ஆட்சிக்கு வந்தால் ஒரே வாரத்தில் அவன் எல்லாம் பெட்டியை கட்டிக்கொண்டு போய்விடுவான். எத்தனை பேரை எங்கே வைத்து வெளுப்பேன் என்று தெரியாது. ஒரே வாரத்தில் எல்லாரையும் வீட்டிற்கு அனுப்பிவிடுவேன். கஞ்சா வச்சு இருக்கான்.. கேஸ் போடு.. அபின் வச்சு இருக்கான் கேஸ் போடு.. பலாத்காரம் பண்ணிட்டான் கேஸ் போடு என்று ஜெயிலில் போடுவேன். எத்தனை பேரை எங்கே வைத்து வெளுப்பேன் என்று தெரியாது. ஒரு ஆயிரம் பேரை தூக்கி உள்ளே போடுவேன். அவனுக்கு சோறு போட மாட்டேன். அவர்களை விட மாட்டேன். எல்லாம் தெறிச்சு ஓட போகிறான் என்று கூறியிருந்தார்.

சீமான் மீது வழக்குப்பதிவு 

இதையடுத்து பிரஷாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெறுப்பு மற்றும் வன்முறையைத் துாண்டும் வகையில் போலியான வீடியோக்களை பயன்படுத்திய அனைவரும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறைக்கு வெளிப்படையாக அழைப்பு விடுப்பவர்களை இது விடுவிக்காது.

சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? தங்களின் விறுவிறுப்பான பேச்சுகளுக்காகவா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

முதலமைச்சருக்கு நன்றி 

case-filed-against-seeman-prashant-kishore-thanks

இதனையடுத்து சீமான் மீது தேசிய ஒருமைப்பாட்டிற்கு களங்கம் விளைவித்தல், வன்முறையை துாண்டும் வகையில் பேசுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு பிரஷாந்த் கிஷோர் உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.