சமந்தாவின் பாட்டுக்கு பெருகும் எதிர்ப்பு - ஆண்களை கொச்சைப்படுத்தலாமா? எனக் கேள்வி
'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு எதிராக ஆண்கள் அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
புஷ்பா படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் உருவாகியுள்ளது. இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில் படம் டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இவரது இசையில் தமிழில் ஓ..சாமி, ஊ சொல்றியா மாமா ஆகிய பாடல்கள் அனைத்து மொழிகளிலும் ஹிட்டடித்துள்ளன. இதில் ஊ சொல்றியா மாமா பாடலை நடிகை ஆண்ட்ரியா பாட நடிகை சமந்தா நடனமாடியுள்ளார். இதற்காக சமந்தாவுக்கு ரூ.1.5 கோடி சம்பளாக கொடுக்கப்பட்டுள்ளது.
இப்பாடலின் வரிகள் ஆண்களைக் கொச்சைப்படுத்துவதாகக் கூறி ஆண்கள் அமைப்பு ஒன்று ஆந்திர உயர் நீதிமன்றத்தில் இப்பாடலைத் தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளது. தெலுங்கில் இதற்கான வரிகளை எழுதியவர் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆவார்.
இப்பாடல் ஒரு பெண்ணின் பார்வையில் ஆண்களைக் குறித்த விமர்சனமாக உருவாகியுள்ளது. இதன் வரிகள் ஆண்களை வக்கிர மனம் கொண்டவர்களாகவும் காமம் குறித்த சிந்தனையிலே இருப்பவர்களாகவும் சித்திரித்துள்ளதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
. ஆணின் பலவீனங்களை அடுக்கிச் சொல்வதுபோல் அமைந்திருக்கும் இந்தப் பாடல் துள்ளலாகவும் இருக்க வேண்டும், கிண்டல் தொனியுடனும் இருக்க வேண்டும். தெலுங்குப் பாடலுக்கு இணையாகவோ அதற்கு மேலாகவோ பாடல்வரிகள் அமைய வேண்டும் என்று எழுதினேன். ஆணின் 'பெண் சபல புத்தி'க்கு எந்தப் பாகுபாடும் இல்லை என்ற அடிப்படையில்தான் இந்த வரிகளை அமைத்தேன்.
மொத்த வரிகளும் களேபரமாக அமைந்துவிட்டன. இரண்டே நாள்களில் இரண்டு மில்லியன் வியூஸை கடந்து இணையத்தில் ஹிட்டடித்திருக்கிறது பாடல். இது எனக்கு பெரும் உற்சாகத்தைத் தருகிறது. இந்தப் பாடல் அவர்களை விமர்சிப்பதாக இருந்தாலும் பெருந்தன்மையாகப் பாடலை ரசிக்கிறார்கள் ஆண்கள். பெண்களுக்கும் பாடல் பிடித்திருக்கிறது என இந்தப் பாடலின் தமிழ் வரிகளை எழுதிய பாடலாசிரியர் விவேகா பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.