முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சிக்கான தேர்தல் தமிழகமெங்கும் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்றது. இந்த உள்ளாட்சித்தேர்தலில் திமுக அதிமுக நேரடியாகவும் மறைமுகமாகவும் மோதலில் ஆங்காங்கே ஈடுபட்டது.
அதில் சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட சஞ்சீவிராயன் கோயில் தெருவில், 49-வது வார்டு வாக்குச்சாவடி முகாமில்,
நரேஷ் என்பவர் கள்ள ஓட்டு போட வந்ததாக முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி அரைநிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்றது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அந்த வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
முன்னாள் அமைச்சரே , அந்த நபரின் சட்டைய கழட்ட சொல்லும் காட்சியில் இருந்து அவரை காவல்துறையில் ஒப்படைக்காமல் அவர்களே அரைநிர்வாணமாக அழைத்துச் சென்ற வரை அனைத்து செயலும் அத்துமீறல் என்ற நிலையில் காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல், பயங்கரமான ஆயுதத்தால் தாக்குதல், பிறருக்கு தொல்லை கொடுத்தால், ஆபாசமாக நடந்து கொள்ளுதல், கலகம் தூண்டுதல்,
கொடுங்காயம் விளைவித்தல், அத்துமீறி வாக்குச்சாவடிக்கு நுழைதல் மற்றும் அரை நிர்வாணப்படுத்தி அடித்தல் உட்பட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.