நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு

exminister admkjayakumar casedfiled
By Swetha Subash Mar 18, 2022 10:02 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் மீது திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ள ஜெயக்குமார் இன்று திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் மூன்றாவது முறையாக கையெழுத்திட்டார்.

நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு | Case Filed Against Admk Minister Jayakumar

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சி தலைவர்கள், முக்கியஸ்தர்கள் வரும் போது தொண்டர்கள் வருவது காலம் காலமாக இருப்பது தான்.

தற்போது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதற்காக வழக்கு பதிவு செய்துள்ளார்கள். டெல்லியில் தி.மு.க, தமிழக ஆளுநரை நீக்க வேண்டும் என பேசுகிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் அவரை நேரில் சந்திக்கிறார்கள்.

ஆளுநருக்கென்று அரசியலமைப்பு சில அதிகாரங்களை வகுத்துள்ளது. அரசியலமைப்புக்குட்பட்டு தன் கடமையை நிறைவேற்றி வருகிறார்.

தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க அரசு நிறைவேற்றப்போவதில்லை. அவர்கள் பட்ஜெட்டில் அல்வா கொடுக்கும் வேலையை தான் செய்கிறார்கள்.

எங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு லேபில் ஒட்டும் வேலையை தான் தி.மு.க அரசு செய்கிறார்கள் என்றார்.

நிபந்தனை ஜாமினில் வெளி வந்துள்ள ஜெயக்குமார் மூன்று நாட்களில் இரண்டு வாரங்கள் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி கடந்த 14 ஆம் தேதி மற்றும் 16 ஆம் தேதி கையெழுத்திட்டார். அந்த இரண்டு நாட்களும் கையெழுத்திட வரும் போது அதிக அளவிலான அ தி.மு.க தொண்டர்கள் காவல் நிலையத்திற்கு அவருடன் வந்து தொடர்ந்து முழக்கமெழுப்பினர்.

நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு | Case Filed Against Admk Minister Jayakumar

இந்நிலையில் திருச்சி கண்டோன்ட்மென்ட் காவல்நிலையத்தில், நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,

பரஞ்சோதி உள்ளிட்ட அ.தி.மு.க வினர் மீது சட்ட விரோதமாக கூடுதல், கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியது, அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயல்படல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதன் காரணமாக அவருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமின் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.