பெண்கள் குறித்து அவதூறு பேச்சு - பிரபல நடிகர் மீது போலீசில் புகார்
பெண்களை அவதூறாக பேசுவதாக பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை கதாப்பாத்திரங்களிலும் காமெடி ரோல்களிலும் நடித்து பிரபல நடிகராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன்.
பத்திரிக்கையாளராகவும் இருக்கும் இவர் சொந்த யூட்யூப் சேனலை நடத்தி வருகிறார். அந்த சேனலில் தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்த ரகசியங்கள், சினிமா அப்டேட்டுகள், நடிகர் நடிகைகளின் பெர்சனல் விஷயங்கள் என அனைத்தையும் பகிர்ந்து வருகிறார்.
பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் பற்றி அதிர்ச்சி அளிக்கும் செய்திகளையும் கடந்த காலங்களில் வெளியிட்டு இருக்கிறார்.
இவரின் யூடியூப் சேனலுக்கு தனி ஃபாலோவர்ஸ்களே உள்ளனர். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் பெண்களை பற்றி சமூக வலைதளங்கள் மற்றும் யூட்யூப் சேனல்களில் அவதூறாக பேசி வருவதாக கூறி திரைப்பட தயாரிப்பளர் சங்கம்,
தமிழர் மக்கள் இயக்கம் சார்பில் ராஜன், இயக்குநர் திருமலை உள்ளிட்டோர் இணைந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.