விஜய் மீது 2 குற்ற வழக்குகள்: வேட்புமனுவில் தகவல்
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது மீது இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.
கடந்த மாதம் 30ம் தேதி பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்த விஜய், பிரசாரத்தை தொடங்கினார்.

நேற்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார், அதில் இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
முதல் வழக்கு, பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் பிரசாரம் மேற்கொண்ட் போது நடைபெற்றதை அடிப்படையாக கொண்டது.
இரண்டாவது வழக்கு, 2025 ஆகஸ்ட் மாதத்தில் மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டின் போது ஏற்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையதாகும்.
பெரம்பூரில் தாக்கல் செய்த போது, மதுரை மாநாடு குறித்த வழக்கு குறிப்பிடப்படவில்லை, இது விவாதத்தை கிளப்பியுள்ளது, இது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
