சிக்கிய சன்னி லியோன்..மோசடி வழக்கு - நீதிமன்றம் அதிரடி!
சன்னி லியோன் மீதான மோசடி வழக்கின் விசாரணைக்கு 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சன்னி லியோன்
பாலிவுட் சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். தற்போது தமிழ் சினிமாவில் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு கேரளாவில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதாக கூறி 20 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார் சன்னி லியோன்.
ஆனால் ஒப்புக்கொண்டப்படி நிகழ்ச்சியை நடத்தவில்லை என்றும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்றும் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தன் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லாததால்
மோசடி வழக்கு
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த வழக்கால் தனக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் சன்னி லியோன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் வரை சன்னி லியோன் மீது எந்தவிதமான குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.
மேலும், விசாரணைக்கு 2 வாரங்களுக்கு தடை விதித்து குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.