போலீசில் சிக்கிய பிரபல பிக்பாஸ் நடிகை - இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக புகார்
இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக புகார் எழுந்ததால் பிரபல பிக்பாஸ் நடிகை மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசன் சமீபத்தில் முடிந்தது. இதில் டைட்டில் வின்னராக ராஜூ தேர்வானார். அதனைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் எனப்படும் 24 மணி நேர ஓடிடி தளத்தில் நேரலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனிடையே தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே தெலுங்கிலும் ஆரம்பிக்கப்பட்டது. அங்கும் இதுவரை 5 சீசன் நிறைவடைந்த நிலையில் நடிகர் நாகார்ஜூன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இதில் நடந்து முடிந்த தெலுங்கு பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராகக் கலந்துக் கொண்டவர் சரயு ராய் முதல் ஆளாக எலிமினேட் ஆகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய விளம்பர வீடியோ ஒன்றில் போதையில் இருக்கும் சிலர் விநாயகரை புகழ்ந்து கோஷம் எழுப்புவது போல காட்டப்பட்டும் காட்சியில் சரயு ராய் நடித்துள்ளார். இது இந்துக்கள் மனதை புண்படுத்துவது போல இருக்கிறது என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் புகார் அளிக்க, அதனடிப்படையில் நடிகை சரயு ராய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.