பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது பாய்கிறது உபா சட்டம் - என்ன நடந்தது?
அருந்ததி ராய் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது.
அருந்ததி ராய்
2010ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய், ”காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக இருந்ததில்லை.
ராணுவ பலத்தைக் கொண்டு காஷ்மீரை இந்தியா கைப்பற்றியது. காஷ்மீர் விடுதலைக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் பேரில்,
அருந்ததி ராய் மற்றும் காஷ்மீர் மத்திய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஷேக் சவுகத் ஹுசைன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இதுகுறித்த வழக்கு டில்லி மெட்ரோ பொலிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
உபா சட்டம்
இந்நிலையில், இருவர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.
சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி 2010-ல் காஷ்மீரில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய Arundhati Roy அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கில், 14 ஆண்டுகளுக்கு பின் Unlawful Activities Prevention Act (UAPA) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க டெல்லி ஆளுநர் சக்சேனா அனுமதி அளித்திருப்பது…
— Mano Thangaraj (@Manothangaraj) June 14, 2024
தற்போது, இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அருந்ததி ராய் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் .குற்றம் சுமத்தப்படக்கூடிய கருத்துக்களை தேர்தல் நேரத்தில் பேசிய பாஜக தலைவர்கள் மீது சட்டம் மௌனம் காப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.