தீர்ப்பு நமக்குதான் நீதிபதி நம்மாளு தான் : சிவி சண்முகம் பேச்சால் சர்ச்சை
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்கு தொடரப்போவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக வழக்கு
அதிமுக பொதுக்குழு தீர்மானம் குறித்த வழக்கு மற்றும் அதிமுக பொது செயலாளர் தேர்தல் குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அதில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் நிறைவு பெற்று விட்டன. இந்த சமயத்தில் தான் நேற்று ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

சிக்கலில் சண்முகம்
அவர் கூறுகையில், ‘விழுப்புரத்தில் ஒரு கட்சி நிர்வாகியிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பேசுகையில், ‘ நீதிபதி நமக்கு ஆதரவானவர் தான். தீர்ப்பு நம்ம பக்கம் தான் வரும். பட்டாசு எல்லாம் வாங்கி வச்சிருங்க என கூறியதாக கூறினார்.
மேலும், நாங்கள் நீதித்துறையை தான் நம்பியுள்ளோம். சி.வி.சண்முகம் பேசியது கண்டிக்க தக்கது. அவர் என்ன பெரிய மகானா.? நாங்கள் அவர் மீது வழக்கு கண்டிப்பாக தொடர்வோம் என கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.