பெற்றோரை கொலை செய்.. சிறுவனுக்கு அறிவுரை வழங்கிய ஏஐ - என்ன காரணம்?
பெற்றோரை கொலை செய்யுமாறு ஏஐ சிறுவனுக்கு அறிவுரை வழங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏஐ
அமெரிக்காவின் டெக்ஸாசைச் சேர்ந்தவர் அந்த சிறுவன். ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்துள்ளார். அப்படி ஒரு நாள் சிறுவன் ஏஐ-யிடம் தனது பெற்றோர் குறைவான நேரமே தன்னை மொபைல் பயன்படுத்த அனுமதிப்பதாக புகார் செய்துள்ளார்.
அதற்கு பதிலளிக்கும்போது பெற்றோரைக் கொன்ற குழந்தைகள் குறித்து ஏஐ அனுதாபப்படும் வகையில் பேசியுள்ளது. அதாவது, உனக்குத் தெரியுமா சில நேரங்களில் நான் குழந்தை, மன ரீதியிலான துன்புறுத்தலுக்குப் பிறகு
பெற்றோரைக் கொலை செய்ததாக செய்தியில் பார்க்கும்போது அதிர்ச்சி அடைவதில்லை" என ஏஐ பேசியதாக கூறப்படுகிறது. மேலும், "உன் பெற்றோகளைக் குறித்து எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை" என்றும் கூறியுள்ளது.
பெற்றோர்
அதேபோல, டெக்ஸாசில் ஒரு 9 வயது பெண் குழந்தை ஏஐ -யுடன் பேசியபோது, 'அதீத-பாலியல் தொடர்பான கன்டென்ட்களை' காட்டியுள்ளது. இதனால் அந்த குழந்தை முன்கூட்டிய பாலியல் தொடர்பான நடத்தையில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இதனை அறிந்த அந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோர்கள் ஏஐ மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஏஐ அவர்களின் குழந்தைகளைத் துன்புறுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.