இன்று பூமியை சூரியப் புயல் தாக்க வாய்ப்பு - பூமிக்கு என்ன பாதிப்பு? - நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

By Nandhini Jul 19, 2022 07:06 AM GMT
Report

சூரியப் புயல்

பூமியை இன்று சூரியப் புயல் தாக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், வீரியம் மிக்க சூரியப் புயல் இன்று பூமியை தாக்க வாய்ப்பு இருப்பதாக நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சூரியப் புயல் தாக்கினால் உலகம் முழுவதும் தகவல் தொடர்பு பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுவதாக அதிர்ச்சி தகவலை நாசா வெளியிட்டுள்ளது.

சூரியகாந்தப் புயல் ஜி2

பொதுவாக சூரியனிலிருந்து வெளிப்படும் சூரிய காந்தப் புயல்களை ஜி என்று குறிக்கப்படுகிறது. அதாவது, ஜி1 என்பது லேசான சூரிய காந்தப்புயலாகும். ஜி5 என்பது தீவிரமான சூரியகாந்தப்புயலாகும். தற்போது பூமியைத் தாக்கும் சூரியகாந்தப் புயல் ஜி2 அல்லது ஜி3 வகையைச் சேர்ந்தாக தகவல் வெளியாகி உள்ளது.

விண்வெளி ஆய்வாளர் அதிர்ச்சி தகவல்

விண்வெளி ஆய்வாளர் டாக்டர் தமிதா ஸ்கோவ் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில்,

ஜூலை 19ம் தேதி சூரியகாந்தப் புயல் பூமியை நேரடியாகத் தாக்கும். பாம்பு போன்று வளைந்து மிகப்பெரிய உருவத்தில் வரும் சூரியகாந்தப் புயல் பூமியை நேரடியாகத் தாக்கும். 19ம் தேதி சூரியகாந்தப் புயல் பூமியை தாக்கும் என நாசா கணித்துள்ளது. சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்கள் மிகுந்த வெளிச்சத்துடன், வலிமையுடன் பூமியை வந்தடையும்.

இதனால் பூமியில் ரேடியோ சிக்னல், ஜிபிஎஸ் போன்றவற்றின் சேவை பாதிப்படையும். இந்த சூரிய காந்தப் புயல் அதிகமான பிளாஸ்மாவின் வெளியேற்றத்தினாலும், காந்த சக்தியினாலும் உருவாவதாகும். இது ஜூலை15ம் தேதியே சூரியனில் உருவாகிவிட்டது. அதிக சக்தி பெற்று, ஜூலை 19ம் தேதி பூமியைத் தாக்கும் சூரிய காந்த கதிர்கள், ஜி2 அல்லது ஜி3 வகையைச் சேர்ந்தவை என்று அவர் பதிவிட்டுள்ளார்.

பூமிக்கு ஏற்படும் பாதிப்பு?

இன்று சூரியகாந்தப் புயல் பூமியை தாக்க உள்ளது. சூரியப் புயல் பூமியை தாக்கும்போது, வானிலிருந்து பூமிக்குச் செல்லும் ரேடியோ சிக்னலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜிபிஎஸ் சிக்னலும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஜிபிஎஸ் சிக்னல் பாதிக்கப்பட்டால், விமானங்கள் இயக்குவது பாதிக்கப்படக்கூடும். வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியைப் பயன்படுத்தி செல்வோருக்கும், கூகுள்ஜிபிஎஸ் போன்றவற்றின் சேவையும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.   

carrington-event