ஆதரவற்ற குழந்தையை பெல்ட்டால் மோசமாக தாக்கிய காப்பாளர் - நடுங்கவைக்கும் சம்பவம்!

Coimbatore Crime
By Sumathi Sep 26, 2025 05:19 PM GMT
Report

சிறுவனை பெல்டால் தாக்கிய காப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்கிய காப்பாளர்

கோவை, கோட்டைபாளையத்தில் தனியார் சிறுவர்கள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 18 வயது வரை உள்ள 9 சிறுவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.

coimbatore

இந்நிலையில், காப்பகத்தில் வசித்து வரும் நான்காம் படித்து வரும் 8 வயது சிறுவன் ஒருவரை அங்கு பணியாற்றும் காப்பாளர் செல்வராஜ் (64), பெல்டால் கொடூரமாக தாக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சித்தினு கூட பார்க்கல.. முதல் மனைவியின் 2வது மகன் வெறிச்செயல் - கொடூர சம்பவம்!

சித்தினு கூட பார்க்கல.. முதல் மனைவியின் 2வது மகன் வெறிச்செயல் - கொடூர சம்பவம்!

பகீர் சம்பவம்

இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் காப்பகத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

ஆதரவற்ற குழந்தையை பெல்ட்டால் மோசமாக தாக்கிய காப்பாளர் - நடுங்கவைக்கும் சம்பவம்! | Caretaker Brutally Beat Child Coimbatore Viral

மேலும் தகவலறிந்து வந்த போலீசார் காப்பக நிர்வாக அரங்காவலர் நிர்மலா மற்றும் சிறுவனை தாக்கிய காப்பாளர் செல்வராஜ் ஆகிய இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து செல்வராஜை போலீசார் கைது செய்தனர். பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.