எது அட்டை பெட்டியில தண்ணீர் விற்பனையா? நாட்டிலேயே முதன்முறையாக தொடக்கம்! பொதுமக்கள் வியப்பு!
ஐதராபாத்தை சேர்ந்த இளம் தொழில் முனைவோர் இருவர் பிளாஸ்டிக் பயன்பாட்டை பெரிதும் குறைக்கும் வகையில் அட்டை பெட்டிகளில் தண்ணீரை அடைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

சுனீத், சைதன்யா ஆகிய இருவரும் கேரோ வாட்டர் என்னும் பெயரில் அட்டை பெட்டிகளில் தண்ணீரை அடைத்து விற்கும் தொழிலை நாட்டிலேயே முதன் முறையாக தொடங்கியுள்ளனர் 5 லிட்டர் தண்ணீர் உள்ள அட்டை பெட்டியின் உட்புறத்தில் 45 கிராம் பிளாஸ்டிக்கும், 20 லிட்டர் தண்ணீர் உள்ள அட்டைப்பெட்டியின் உட்புறத்தில் 90 கிராம் பிளாஸ்டிக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை 85 விழுக்காடு குறைந்துள்ளதாகவும், காலி அட்டை பெட்டிகளை மறு சுழற்சிக்கு தாங்களே எடுத்து கொள்வதாகவும் இளந்தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர்.