உலகில் முதல்முறை.. கால்நடைகளுக்கு வரி - எந்த நாட்டில் தெரியுமா?
கால்நடைகள் கார்பன் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கார்பன் வரி
டென்மார்க் அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, பசு, பன்றி உள்ளிட்ட கால்நடைகளுக்கு கார்பன் வரி விதிக்கவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) வெளியிட்ட தகவலின்படி, 2020ஆம் ஆண்டில் இருந்து மீத்தேன் வாயு உமிழ்வு அதிகரித்து வருகிறது. தற்போது வெளியாகும் மொத்த மீத்தேன் வாயுவில் 32% கால்நடைகளால் உருவாகிறது.
என்ன காரணம்
பசுமை இல்ல வாயு உமிழ்வை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டென்மார்க் அரசு 1990ஆம் ஆண்டில் இருந்த அளவில் இருந்து 2030ஆம் ஆண்டுக்குள் 70% வரை குறைக்க திட்டமிட்டுள்ளது. ஆய்வுகளின்படி, ஒரு பசு ஆண்டுக்கு 6.6 டன் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது.
எனவே இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவுக்கு இறங்கியுள்ளனர். 2030ஆம் ஆண்டு முதல் இந்த வரி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், சுற்றுச்சூழலை பாதுகாக்க இது ஒரு அவசியமான நடவடிக்கை எனக் கருதுகின்றனர்.
இது உலகிலேயே முதல் முறையாக அமல்படுத்தப்படும் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.