கண்களில் கண்ணீரை வரவழைக்கும் கருவேப்பிலை விலை - இனி சும்மாலாம் கிடைக்காது..!

Tamil nadu
By Thahir Feb 09, 2023 07:39 AM GMT
Report

கடும் பனிப்பொழிவு காரணமாக கருவேப்பிலை வரத்து குறைந்துள்ளதால் கரூரில் ஒரு கிலோ கருவேப்பிலை விலை ரூ.100 விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரூ.100க்கு விற்பனையாகும் கருவேப்பிலை 

நாம் அன்றாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தவாரங்களில் ஒன்று கருவேப்பிலை, இது காய்கறி வாங்கும் போது இலவசமாக கேட்டு பெறுவோம்.

இந்த நிலையில் இனி கருவேப்பிலை காசு கொடுத்தால் தான் வாங்க முடியும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாகவும், அண்மையில் பெய்த மழை காரணமாகவும் கருவேப்பிலை விளைச்சல் என்பது குறைந்துள்ளது.

கண்களில் கண்ணீரை வரவழைக்கும் கருவேப்பிலை விலை - இனி சும்மாலாம் கிடைக்காது..! | Caraway Price Hike In Karur

இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் ஒரு கிலோ கருவேப்பிலை அதிகபட்சமா ரூ.100க்கும் குறைந்த பட்சம் ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று முருங்கைக்காய் விலை ஒரு கிலோ ரூ.100 க்கும் மாங்காய் ஒரு கிலோ ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.