அசுர வேகத்தில் சென்ற கார்…கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு

Tamil nadu Coimbatore Tamil Nadu Police
By Thahir Sep 09, 2022 11:04 AM GMT
Report

கோவை அருகே அசுர வேகத்தில் சென்ற கார் கட்டப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

ஓணம் கொண்டாட்டம் 

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரோஷன் இவர் கேரளா மாநிலத்தைச் சேரந்தவர் என்பதால் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் தனது நண்பர்களுடன் இணைந்து உறவினர் ஒருவரின் காரை எடுத்துக்கொண்டு கோவை சிறுவாணி சாலையில் உள்ள செலிப்ரிட்டி கிளப்பில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் இரவு முழுவதும் அங்கு தங்கிய ரோஷன் மற்றும் அவரது நண்பர்கள் இன்று காலை 6 மணிக்கு காரில் வடவள்ளியில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளனர். வரும் வழியில் ரோஷன் காரை அதிவேகமாக இயக்கி உள்ளார்.

அப்போது தொண்டாமுத்தூர் இடையே உள்ள தென்னமநல்லூர் பகுதியில் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து பழனிசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தின் இருப்பு கோட்டை உடைத்துக் கொண்டு, உள்ளே புகுந்த கார் அங்கிருந்து 120 அடி அள கிணற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.

அசுர வேகத்தில் சென்ற கார்…கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு | Car Lost Control And Plunged Into Well 3 Killed

3 பேர் உயிரிழப்பு 

கிணற்றில் 50 அடியில் தண்ணீர் இருந்ததால் 4 பேரும் நீரில் முழ்கி உயிருக்கு போராடியுள்ளனர். அப்போது காரை ஓட்டி வந்த ரோஷன் மட்டும் காரை திறந்து வெளியே வந்து உயிர் தப்பினார். மற்ற 3 பேரும் காரை விட்டு வெளியே வரமுடியாமல் சிக்கி கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் 3 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து ரோஷன் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்த காரை மீட்டனர்.

பின்னர் உயிரிழந்தவர்களின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.