மாடுபிடி வீரருக்கு கார் பரிசா? - இயக்குநர் தங்கர் பச்சானின் மாற்று யோசனை

cmmkstalin directorthankarbachan jallikattu2021
By Petchi Avudaiappan Jan 19, 2022 12:25 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு கார் பரிசளிப்பது தொடர்பாக இயக்குநர் தங்கர்பச்சான் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. அதிகம் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது.

மாடுபிடி வீரருக்கு கார் பரிசா? - இயக்குநர் தங்கர் பச்சானின் மாற்று யோசனை | Car Gift Alternative Idea By Thangarbachan

இதுகுறித்து இயக்குநர் தங்கர்பச்சான் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாடு பிடி வீரருக்கு கார் பரிசா? சென்ற ஆண்டும் போட்டியில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளித்த போது இதே கோரிக்கையை அரசிடம் அளித்திருந்தேன். ஆனால் அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு வீரருக்கு முதல் பரிசாக முதலமைச்சர் கார் வழங்குவதாக செய்தியை அறிகிறேன்.

வீரர்கள் உயிரைப்பணயம் வைத்து பங்கு பெரும் இப்போட்டிகளை நடத்துவதில் ஒவ்வொரு தமிழரும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றோம்! இப்போட்டியில் வென்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் பரிசுகள் குறித்து இப்பொழுதாவது அரசு சிந்திக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே இதேபோல் காரினைப் பரிசாகப் பெற்ற வீரர்கள் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்? எந்த மாதிரியான வாழ்க்கையை இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள்,நிலம் இவைகளைத் தந்து அவருடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தித் தந்தால் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை நாம் அடையலாம்! பரிசு தரும் காரை வைத்துக்கொண்டு (எரிபொருள்) பெட்ரோல் டீசல் விற்கும் விலையில் அதற்கு செலவழிப்பதற்காகவே அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். 

தயவு கூர்ந்து முதலமைச்சர் இக்கோரிக்கைக் குறித்து சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என தங்கர் பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது இணையவாசிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.