காரில் ஜோடிகள் செய்த அநாகரீக செயல்.. கடுப்பான டிரைவர் எடுத்த முடிவு - வைரல் சம்பவம்!
ரொமான்ஸ் செய்த ஜோடிகளுக்கு எதிராக டிரைவர் போட்ட வாசகம் வைரலாகி வருகிறது.
ஜோடிகள்..
ஐதராபாத்தை சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் தனது வாகனத்தில் பயணிக்கும் ஜோடிகளை எச்சரிக்கும் வகையில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது, வெங்கடேஷ் என்பவர் அந்த கேப் வண்டியில் ஏறிய போது டிரைவரின் இருக்கைக்கு பின்னால் ஒரு பேப்பர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்தார். அந்த பேப்பரில் "எச்சரிக்கை!! நோ ரோமன்ஸ்... இது ஒரு வண்டி... இது உங்களின் தனிப்பட்ட இடம் அல்ல (OR) OYO அல்ல.
டிரைவர்
எனவே இடைவெளிவிட்டு அமைதியாக இருங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பார்த்ததும் வினோதமாகவும் வேடிக்கையாகவும் இருந்த இந்த பேப்பரை உடனே தனது செல்போனில் அவர் படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
மேலும், அதனை வெங்கடேஷ் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.