லிப்ட் கேட்ட கல்லூரி மாணவி பலாத்காரம்.. கால்வாயில் தூக்கி வீசிய கொடூரம்!
லிப்ட் கேட்ட கல்லூரி மாணவியை காருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிப்ட் கேட்ட மாணவி
உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்புரின் ஜெய்சிங்பூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் 23 வயதான மாணவி ஒருவர் பி.டெக் படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 7) அன்று மாலை கல்லூரி வகுப்பை முடித்து விட்டு மாணவி வீடு திரும்பியுள்ளார். அப்போது, சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரில் லிப்ட் கேட்டுள்ளார்.
அத்துமீறிய ஓட்டுநர்
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு கார் மாணவியை ஏற்றிச் செல்வதற்காக நின்றுள்ளது. பின்னர், அந்த மாணவியும் காரில் ஏறிச் சென்றுள்ளார்.
கார் சிறிது தூரம் சென்றதும், காரை ஓட்டி வந்த நபர், காரை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த மாணவியை காருக்குள் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், பயத்தில் அந்த மாணவி மயக்கமடைந்துள்ளார்.
பின்னர், அந்த நபர் சாலையோர கால்வாய் அருகே மாணவியை தூக்கி வீசிச் சென்றுள்ளார். இதையடுத்து, வீட்டிற்கு சென்ற மாணவி, நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக போலீசிடம் புகார் அளித்த நிலையில் போலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.