பயங்கர கார் விபத்து... - உயிரை காப்பாற்றியவர்கள் ரிஷப்பை மருத்துவமனையில் சந்தித்தனர்...!
கார் விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்கள் மருத்துவமனையில் அவரை சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.
கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்
சமீபத்தில் ரிஷப் பண்ட் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கழிக்க டெல்லியிலிருந்து ரூர்க்கிக்குச் சென்றுக்கொண்டிருந்தபோது பயங்கர கார் விபத்தில் சிக்கினார். இச்செய்தி அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த விபத்தில் தீப்பிடித்து எரிந்த காரின் முன் கண்ணாடியை அடித்து நொறுக்கி உயிர் தப்பினார் ரிஷப் பந்த். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பந்த்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மருத்துவமனையில் பண்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் ரிஷப் உடல் நலத்திற்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
உயிரை காப்பாற்றியவர்கள் ரிஷப்பை சந்தித்தனர்
கார் விபத்தில் டிவைடரில் மோதிய ரிஷப், தீப்பிடிக்கும் முன் காரிலிருந்து வெளியே வர முயற்சித்தார். அவரால் வெளியே வர முடியவில்லை. அப்போது, விபத்து நடந்த இடத்தில் உள்ளூர்வாசிகளான ரஜத் மற்றும் நிஷு ஓடி வந்து ரிஷப்பை காரிலிருந்து இழுத்து உயிரை காப்பாற்றினர். பின்னர் பஸ் டிரைவர் சுஷில் குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆம்புலன்சை ஏற்பாடு செய்து, போலீசாருக்கு போன் போட்டு தகவல் கொடுத்தார்.
இந்நிலையில், கார் விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்கள் மருத்துவமனையில் அவரை சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். விபத்துக்குப் பிறகு முதல் முறையாக நேற்று இவர்கள் மருத்துவமனையில் ரிஷப் பண்டை சந்தித்தனர்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விபத்திலிருந்து காப்பாற்றியவர்களுக்கு ரிஷப்பின் ரசிகர்கள், நெட்டிசன்கள் பலர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Stable Rishabh Pant meets his rescuers in hospital after horrible car accident https://t.co/cX8ocBi7wt
— abuukasyah (@abuukas60979442) January 3, 2023