கட்டுப்பாட்டை இழந்த கார் ஓட்டலுக்குள் புகுந்து கோர விபத்து - ஒருவர் உயிரிழந்த பரிதாபம்

By Swetha Subash Apr 25, 2022 05:56 AM GMT
Report

தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென சாலையோரமாக இருந்த ஓட்டலுக்குள் நுழைந்து விபத்தில் சிக்கியதில் கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார், அட்டகுறிக்கி என்னுமிடத்தில் திடீரென சாலையிலிருந்து கீழே இறங்கி சாலையோரமாக இருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

கட்டுப்பாட்டை இழந்த கார் ஓட்டலுக்குள் புகுந்து கோர விபத்து - ஒருவர் உயிரிழந்த பரிதாபம் | Car Accident In Ossur Highway Kills Youth

மோதியதில் கட்டுப்பாடை இழந்த கார் கிருஷ்ணா பேமிலி ரெஸ்டாரெண்ட் (தாபா) ஓட்டலுக்குள் நுழைந்து, அங்கு டீ குடித்துக்கொண்டிருந்த இளைஞர் ரவிக்குமார் (26) என்பவர் மீது மோதியது. 

கட்டுப்பாட்டை இழந்த கார் ஓட்டலுக்குள் புகுந்து கோர விபத்து - ஒருவர் உயிரிழந்த பரிதாபம் | Car Accident In Ossur Highway Kills Youth

இதில் அவர் பலத்த காயமடைந்த்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காரினுள் பெங்களூரை சேர்ந்த அருண் (36) அவரது மனைவி, அம்மா அப்பா என 5 நபர்களும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி போலிசார், ஓட்டலுக்குள் நுழைந்த காரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.