மீண்டும் கேப்டனாகும் பும்ரா; திருந்தாத ரோஹித் சர்மா - ரசிகர்கள் அதிருப்தி!
ரோகித் சர்மா கேப்டன்ஸி தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
ரோகித் மோசமான ஆட்டம்
பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பும்ரா தலைமையிலான முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து ஆஸிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கேப்டன்சி மாற்றம்
குறிப்பாக ரோகித் சர்மா 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனால் ரசிகர்கள் பலரும் ரோஹித் சர்மாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தற்போது அவரது கேப்டன்சியும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
இந்திய அணி, இரண்டாவது நாளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஒருவேளை, முதல் செஷனில் 4 விக்கெட்களை வீழ்த்தவில்லை என்றால், ஆஸ்திரேலிய அணி 100+ ரன்களை முன்னிலை பெற்றுவிடும்.
இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.