‘’ஒருத்தர மதத்தை வைத்து பேசினிங்கன்னா அது முதுகெலும்பு இல்லாதவங்க செயல்’’ - ஷமி தாக்குதல் குறித்து விராட் கோலி கருத்து
டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான்,நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
முதல் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தது.
அந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது சிலர் மத ரீதியிலான தாக்குதலை நடத்தினர். அவர் குறித்து பலரும் தவறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
முகமது ஷமிக்கு முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் ஆதரவு அளித்தனர். அத்துடன் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களும் ஆதரவு அளித்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய கேப்டன் விராட் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதில், 'முகமது ஷமி மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது முதுகு எலும்பு இல்லாத மனிதர்களின் செயல். அது முற்றிலும் தவறானது.
ஒரு மனிதரின் மதத்தை வைத்த நாம் ஒருபோதும் அவர்களை தாக்க கூடாது. களத்தில் விளையாடும் நாங்கள் எப்போதும் இதுபோன்ற தாக்குதல்களை ஏற்று கொள்ள மாட்டோம். இந்திய அணியில் எப்போதும் ஒருவொருக்குவர் இடையே சகோதரத்துவம் உள்ளது.
அதை நாங்கள் எப்போதும் கடைபிடிப்போம். முகமது ஷமி நாங்கள் ஆதரவாக இருப்போம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்த ஹர்திக் பாண்டியா தற்போது குணமடைந்து நல்ல உடற்தகுதியுடன் உள்ளார்' எனக் கூறியுள்ளார்.

ஆட்டம் காட்டுகின்றதா இந்தியா...! சற்றுமுன் பாகிஸ்தானை அலற விடும் வெடிச்சத்தங்கள் - சைரன்கள் IBC Tamil
