லண்டனுக்கு பயணமாகும் கேப்டன் விஜயகாந்த்? வெளியான முக்கிய தகவல்
தே.மு.தி.க வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், தீவிர பிரசாரம் செய்து வருகிறார். உடல் நலிவுற்ற நிலையில் அவர் தேர்தல் களத்துக்கு வருவது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில் தேமுதிகவுக்கு நெருக்கமான நபர் ஒருவர் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர் விஜயகாந்த், தற்போது பிரசார களத்தில் அவரிடம் சில மாற்றங்கள் தெரிகின்றன.
அதைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது, அவரது உடல்நிலையிலும் முன்னேற்றம் இருக்கிறது என்றார். மேலும் தற்போது கேப்டனுக்கு வழக்கமான சிகிச்சை தொடர்ந்தாலும், பேச்சுப் பயிற்சி அளிக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்காக, வாரம் ஒருமுறை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக லண்டனைச் சேர்ந்த மருத்துவர் குழு ஒன்றும் பேச்சுப் பயிற்சி அளித்து வருகிறது. இருப்பினும், மேல் சிகிச்சைக்காக கேப்டனை லண்டனுக்கு அழைத்துச் செல்ல உள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு 20 நாள் பயணமாக லண்டன் செல்லவும் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.