10 ஆண்டு கனவு - நிறைவேறாமலே போன Captain ஆசை..?

Vijayakanth Chennai
By Karthick Dec 29, 2023 07:08 AM GMT
Report

பலரின் ஆசையை நிறைவியேற்றிய நடிகர் விஜயகாந்திற்கு நிறைவேறாத ஆசை ஒன்றும் இருந்துள்ளது.

புது வீடு

சென்னை பூந்தமல்லி காட்டுப்பாக்கம் அட்கோ நகர் பகுதியில் 20 ஆயிரம் சதுர அடியில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் புதிதாக ஒரு வீட்டை கேப்டன் விஜயகாந்த் கட்டி வந்துள்ளார்.

captain-vijayakanth-unfulfilled-desires-new-house

மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வந்த வீட்டின் கட்டுமானப் பணிகள் சில பொருளதார நெருக்கடி காரணத்தினால் தொய்வடைந்தது. அண்மையில் மீண்டும் பணிகள் வேகமெடுத்தன.

நிறைவேறாமல் போன ஆசை

தற்போது 90% பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் பால் காய்ச்சப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் உடல் நல குறைபாட்டினால் விஜயகாந்தினால் பங்கேற்க முடியவில்லை.

captain-vijayakanth-unfulfilled-desires-new-house

அந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போனது தொண்டர்களிடத்தில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.