சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்ட விஜயகாந்த் - வீல் சேரில் வந்தவரை கண்டு கதறிய ரசிகர்கள்!

america vijayakanth captain peoples cry
By Anupriyamkumaresan Aug 30, 2021 09:08 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவ்வப்போது அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று சென்னை திரும்புவது வழக்கம். அந்தவகையில் தற்போது அவர் மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார். இன்று காலை சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு ஜெர்கின் அணிந்தபடி முகக்கவசத்துடன் வீல்சேரில் அழைத்து வரப்பட்டார்.

சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்ட விஜயகாந்த் - வீல் சேரில் வந்தவரை கண்டு கதறிய ரசிகர்கள்! | Captain Vijayakanth Gone America Peoples Cry

அவருடன் மனைவி பிரேமலதாவும் அமெரிக்கா செல்கிறார். விஜயகாந்த் ஏர்போர்ட் வந்த போது, அவரது உடல் நிலையை கண்ட அவரது ரசிகர்கள் பலரும் கண்ணீர் விட்டு கதறினர். விஜயகாந்த் முதன்முறையாக, கடந்த 2018 ஆம் ஆண்டு தான் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சென்னை திரும்பிய பின்னர் தீவிர அரசியலில் அவர் பெரும்பாலும் ஈடுபடவில்லை.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போதுகூட அவர் வாகனத்தில் இருந்தவாறு கையசைத்துச் சென்றார். அதுவே பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. அவரது ரசிகர்களும், தொண்டர்களும் எப்படி மேடைகளில் முழங்கிய விஜயகாந்த் இப்படி பொம்மை போல் ஆகிவிட்டாரே என்று தெரிவித்தனர்.

சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்ட விஜயகாந்த் - வீல் சேரில் வந்தவரை கண்டு கதறிய ரசிகர்கள்! | Captain Vijayakanth Gone America Peoples Cry

கட்சிக் கூட்டங்களில் பிரேமலதாவும், விஜய பிரபாகரும் பேசினர். இந்தத் தேர்தலில் தேமுதிக பெரிதாக தடம் பதிக்கவில்லை. எதுவாகினும், விஜயகாந்த் மீதான மக்கள் அபிமானம் மட்டும் குறையவே இல்லை.

தற்போது அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில் அவரது உடல்நலம் பூரண குணமடைய ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.