தேமுதிக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த கேப்டன் விஜயகாந்த்

chennai vote candidate dmdk vijayakanth
By Jon Mar 26, 2021 11:34 AM GMT
Report

தேமுதிக வேட்பாளர்களுக்காக களத்தில் இறங்கி வாக்கு சேகரித்து வருகிறார் கேப்டன் விஜயகாந்த். சென்னை எழும்பூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரபுவை ஆதரித்து கட்சி தலைவர் விஜயகாந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சேத்துப்பட்டில் வாகனத்தில் அமர்ந்தபடியே கை தூக்கி காண்பித்து மக்களிடம் ஆதரவு திரட்டினார். அதனைத் தொடர்ந்து திருவிக நகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் எம்பி சேகர், வில்லிவாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் சுபமங்களம் டில்லிபாபு ஆகியோருக்கு ஆதரவாக விஜயகாந்த் வாக்கு சேகரித்தார்.