பைலட் வருண்சிங் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

india captain varun singh taken to bangalore further treatment big breaking
By Thahir Dec 09, 2021 11:18 AM GMT
Report

முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 விமானப்படை வீரர்கள் பயணித்த ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் விபத்தில் சிக்கி வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் விபத்தில் சிக்கி தீக்காயமடைந்த கேப்டன் வருண்சிங் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.

தற்போது மேல் சிகிச்சைக்காக வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இருந்து பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார்.

பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் கேப்டன் வருண் சிங் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது