Friday, Jul 18, 2025

குன்னுார் ஹெலிகாப்டர் விபத்து - சிகிச்சை பலனின்றி கேப்டன் வருண் சிங் காலமானார்

passes away coonoor helicopter crash captain varun singh iaf informs
By Thahir 4 years ago
Report

குன்னுார் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் காலமானார்.

நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே கடந்த 8ஆம் தேதி இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்த உயர் அதிகாரிகள் 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் உயிர்பிழைத்த ஒரேயொரு நபரான கேப்டன் வருண் சிங், 80% தீக்காயங்களுடன் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்தார்.

தீக்காயங்கள் என்பதால், வருண் சிங்-கிற்கு தோல் மாற்று சிகிச்சைகள் நடைபெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையிலுள்ள மருத்துவக்கல்லூரி மற்றும் ஆய்வுக்கழகத்திலிருந்து தோல் அனுப்பி வைக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கேப்டன் வருண் சிங் காலமானதாக விமானப்படை தெரிவித்துள்ளது.