சோதனையிலும் சாதனை படைத்த கேப்டன் ரோஹித் சர்மா..!
இந்த ஆண்டின் ஐபிஎல் போட்கள் தொடர்ந்துநடைபெற்று வருகிறது.சென்ற ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி 4 போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது.
அதே போல மும்பை அணி தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் ரசிகர்கள் பெரும் கவலை அடைந்துள்ளன.
23வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. தொடர்ச்சியாக நான்கு தோல்வியை சந்தித்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணி,
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 70 ரன்கள் எடுத்திருந்தார். 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி தொடக்கத்தில் பொறுப்புடன் விளையாடியது.
ஆனால் சீனியர் வீரர்கள் கடுமையாக சொதப்பின.20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மும்பை இந்தியன்ஸ் அணி இந்த போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும், இந்த போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா டி.20 போட்டிகளில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் டி.20 போட்டிகளில் தனது 10000 ரன்களை பூர்த்தி செய்த ரோஹித் சர்மா இதன் மூலம், டி.20 போட்டிகளில் 10000 ரன்கள் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த பட்டியலில் விராட் கோலி 10,379 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
10000 ஆயிரம் ரன்களை கடந்த 7வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரோகித் சர்மா.