‘’ தமிழும் அவளும் ஓர் இனம் ‘’ - நடுவானில் புத்தாண்டு வாழ்த்து கூறிய விமானி, வைரலாகும் வீடியோ

wishes viralvideo tamilnewyear captainpriyavignesh
By Irumporai Apr 15, 2022 10:41 AM GMT
Report

நடுவானில் விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து கவிதை கூறிய விமானியின் கவிதை இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதம் முதல் நாளில் தமிழ் மக்கள் புத்தாடை அணிந்து கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்று வழிபடுவர்.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அனைவரின் வாழ்க்கையிலும் இன்பங்கள் பெருக வேண்டி ஒருவருக்கொருவர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் ,திரைப்பிரபலங்கள் என பலரும் பொதுமக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அந்த வகையில் நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற 6E7299 விமானத்தில் அதன் துணை விமானி {@G_Priyavignesh} பிரியவிக்னேஷ் என்பவர் தமிழ்ப் புத்தாண்டு என்பதால் நம் மண்ணையும், மக்களையும் பிரதிபலிக்கும் அழகான தமிழ்க் கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார்.அந்த கவிதையில் :

தமிழும் அவளும் ஓர் இனம் எங்கள் வீட்டில் புராதனமாய் எனது பாட்டி கால்கள் இரண்டையும் நீட்டி இப்படிதான் அறிமுகபடுத்தினால்

தமிழ் மாதங்களை எனக்கு சித்திரையில் சிங்காரித்து வைக ஆத்துல வராரு அழகரைய்யா

வைகாசில தானே அக்னி வெயிலு என தொடங்கும் இந்த கவிதை தொகுப்பு அவளும் தமிழும் போல் அமையட்டுமே தமிழ் புத்தாண்டு என கூறி முடித்துள்ளார் விமானி பிரிய விக்னேஷ் .

அவரின் கவிதையினை விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பாராட்டுகின்றனர்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரிய விக்னேஷ் ஏற்கனவே விமானத்தில் கொஞ்சும் தமிழை ஒலிக்க வைத்து தமிழர்களின் கவனத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது